பற்றி எரிந்து காரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகரில் ஐனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை அதே பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அனைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.