சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
துருக்கியில் உள்ள ஒரு பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 28 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதார அமைச்சர் கூறியதாவது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து மீத்தேன் அழுத்தத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் நிகழ்ந்த கொண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.