ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனசக்கர பகுதியில் அக்கா மலை புல் மேடு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வால்பாறை வனச்சக்கர துறையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்கா மலை புல் மேடு வனப்பகுதியில் ஆட்டுப்பாதை குறுக்கு வன சுவற்றில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ஹரி ஹர வெங்கடேஷ் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணைகளை இயக்குனர் கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வனத்துறையினர் கூறிய போது வனப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருப்பதனால் ஆண் யானை வழுக்கி விழுந்து இருந்திருக்கலாம். ஆனாலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு யானை இருந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.