மனைவி மற்றும் மகளை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் ஜெயந்தி காலனி பகுதியில் தனபால்-சாரதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தீபா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தீபா வேலைக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனபால் தீபாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனபால் பிளேடை கொண்டு சாரதா மற்றும் தீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாரதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனபாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.