கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும குரு மாவட்டத்தில் உள்ள சிரா என்னும் பகுதிக்கு அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜிப் ஓன்று வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகள் அடங்கும் மேலும் 11 பேர் காயமடைந்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் எனவும் அவர்கள் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இருக்கிறது எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சூழலில் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் தூமகுரு சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.