Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. புனித யாத்திரை… 39 பக்தர்கள் உயிரிழப்பு…!!!!!

உத்தரகாண்ட் புனித யாத்திரை சென்ற பக்தர்களில்  39 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்டில் சார்தம் புனித யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. இதற்காக கடந்த 3ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி முன்னிலையில் பக்தர்களுக்கான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி வலைத்தளங்கள் திறக்கப்பட்டது. அதில் பாத யாத்திரை செல்பவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கொரோனா  கட்டுப்பாடுகளால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வை முன்னிட்டு 6 ம் தேதி கோதார்நாத்  மற்றும் 8ஆம் தேதி பத்ரிநாத் பக்தர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் புனித யாத்திரை தொடங்கி 13 நாட்களில் யாத்திரைக்குச் சென்ற  பக்தர்களில் இதுவரை 39 பேர் உயிரிழக்கின்றனர் என உத்தரகாண்ட் பொது சுகாதாரத்துறை இயக்குனரான  டாக்டர் சைலஜா பட் இன்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் அனைவரும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலை ஏறுவதில் ஏற்பட்ட பாதிப்பு போன்ற பிற உடல் நலம் சார்ந்த பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பயண  வழிகளில் முக்கிய சந்திப்புகளில் பக்தர்களுக்கு சுகாதார பரிசோதனை நடைமுறைகள் தொடங்கப்படுகின்றன. இதில் உடல்நலம் பாதித்த பக்தர்களின் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் உடல்நிலை தேறிய பின் பயணம் செய்யும் படி தெரிவித்து வருகின்றனர். இதில் பலர் பயணம் செய்து வரும்  வழிகளிலேயே உயிரிழந்து வருகின்றனர். அதனால் மருத்துவ ரீதியாக உடல் நிலை சரியில்லாத நபர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் டாக்டர் சைலஜா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |