Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பன்றி காய்ச்சலால் நிறைமாத கர்ப்பிணி பலி… பீதியில் கிராம மக்கள்…!!!!!

மைசூர் மாவட்டம் ஷூன்சூர் தாலுகா கோனணஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாமி நாயக் (54) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சாயா(28). இவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வாரத்திற்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே சாயாவிற்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது மைசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரத்த பரிசோதனையில் h1 n1 என்ற பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |