தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுகுட்லானஅள்ளி பகுதியில் திம்மப்பன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதுடைய விஷ்வன் தாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா குளிப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சங்கீதா குளித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இந்நிலையில் சங்கீதா குழந்தையை வீட்டில் தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கீதா சத்தம் போட்டு கத்தியுள்ளார். இவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை மீட்டு சிகிச்சைக்காக மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது