சேகுவராவை சுட்டுக்கொன்ற மரியோ டெரன்(80) உயிரிழந்தார். அர்ஜென்டினாவை சேர்ந்த சேகுவரா பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவில் ஆட்சியைப் பிடிக்க போராடியவர். அதன்பிறகு 1967-இல் பொலிவியாவிற்குள் நுழைந்து சேகுவராவை பொலிவிய ராணுவத்தினர் கைது செய்தனர்.
இதனையடுத்து சேகுவராவை மரியோ டெரன் சலாசர் என்று ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார். தற்போது 54 ஆண்டுகள் கடந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மரியோ டெரன் பொலிவியாவில் உயிரிழந்தார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.