Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: “கிறிஸ்தவ நிகழ்ச்சியில்” வெறியாட்டம்…. நெரிசலில் சிக்கி பலரும் பலி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

லைபீரியாவின் தலைநகரில் நடைபெற்ற கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் மர்ம கும்பல் நடத்திய கத்தி தாக்குதலையடுத்து அங்கிருந்த ஏராளமானோர் அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி உட்பட 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைபீரியாவின் தலைநகரான மான்ரோவியாவிலிருக்கும் கால்பந்து மைதானத்தில் வைத்து கிறிஸ்துவ நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கிருந்த கூட்டத்தின் மீது மர்ம கும்பல் ஒன்று அதிபயங்கரமாக கத்தி தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி உட்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |