Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்….”உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்”…. 18 பேர் உயிரிழப்பு….!!!!!!!

உக்ரைனின் கிரெமென்சுக்  நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59  பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின்  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் பேசும்போது, பிரம்மன் சூப் ஷாப்பிங் மால் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

கீழ் நகர குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவாக பொதுமக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்ததாக உக்ரைன்  வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன்  நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் துணிச்சலான பயங்கரவாத செயல்களில் ஒன்றாகும் என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில்  உள்ள நெரிசலான மால் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதல் நடந்தபோது  ஷாப்பிங் செண்டரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் 40 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது வலை தளப்பக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் ஷாப்பிங் செண்டரில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இருந்தனர் மால் தீப்பிடித்து எரிந்தது. மீட்பு பணியாளர்கள் தீயை அணைத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது என அதில் பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |