சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவில் மகிழன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது நண்பரான திருச்செங்கோடு பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தியுடன் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மகிழன், சக்கரவர்த்தியின் உதவியுடன் தொட்டிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியின் ஆசை வார்த்தைகள் கூறி கடித்தி சென்றுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து சிறுமியை கடத்திய மகிழன் மற்றும் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.