எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இளங்கோவனுக்குச் சொந்தமான் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 20 கிலோ தங்க நகைகள், 2 சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இளங்கோவன் 70 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் இளங்கோவன் பெயரில் 5 1/2 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்நிய செலவாணி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தகம் முதலீடுகள், 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடு, வாழப்பாடியில் உள்ள நகை கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 கிலோ தங்க நகைகள், மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள் கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறியுள்ளனர்.