தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி பெருங்காயத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெருங்காயம் வாயுக் கோளாறுக்கு மிகவும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் உதவுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலம் வழியாக மார்பு சளி இருமல் மூலம் வெளியேற்றுகிறது. மார்பு சளி, மூச்சுக்குழல் மற்றும் அலர்ஜியை போக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்தத்தின் அடர்த்தி குறைகிறது. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.