சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர் பாலு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் இனி ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க போகிறது. பெரியார் என்றால் சமூகநீதி. அண்ணா என்றால் மாநில உரிமை. கலைஞானி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை. பாவேந்தர் என்றால் மொழிப்பற்று. பேராசிரியர் என்றால் இனமானம் என்று பேசியுள்ளார். மேலும் இந்த விழாவில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார்.