பெருமாளும், பெரியாரும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் என வைகோ மகன் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைகோ மகன், முதற்கட்டமாக என்னுடைய திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகவும், மறுமலர்ச்சி திராவிட கழக இயக்கத்திற்காகவும், தொண்டர்களுக்கும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வலதுசாரி கட்சியை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்ற அரசியலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அதற்கான என்னுடைய பணிகளை செய்ய விரும்புகின்றேன். வலதுசாரி அரசியல் வேண்டாம் என்று சொல்கிறேன்.பெரியார் இல்லையென்றால் சமூகநீதி கிடையாது, பெரியார் இல்லை என்றால் நம்மில் பலபேர் வந்து கோவிலுக்குள்ளேயே போக முடியாது. அதனால்தான் சொல்கிறேன் பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதாவது அண்ணாவே பெரியாரிடம் இருந்து தான் வந்தார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன், நாங்கள் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம், பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் என்பது அண்ணாவுடைய கருத்து. எல்லாரும் தேவாலயங்களில் ஜெபக்கூட்டம் நடக்கட்டும், கோவில்களில் ஆறு கால பூஜை நடக்கட்டும், மசூதிகளில் தொழுகை நடக்கட்டும். அதே நேரத்தில் இந்த பகுத்தறிவு பிரச்சாரமும் நடக்கட்டும். இதுவே எங்கள் இயக்கத்தில் உடைய கொள்கை.
எங்களுடைய பொதுச்செயலாளர் பலமுறை கூறியிருக்கிறார். நான் வந்து அதை கொஞ்சம் சுருக்கமாக பெருமாளும், பெரியாரும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். நான் இறை நம்பிக்கை உடையவன் நான் அதை மறுப்பது கிடையாது என வைகோ மகன் தெரிவித்தார்.