பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான சந்திரசேகர் உடனுறை ஆனந்தவல்லி மற்றும் முருகன், விநாயகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு ஆறுநாட்டு வேளாளர் சங்கம் சார்பில் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.
மேலும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அரசு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆறுநாட்டு வேளாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோவில் செயல் அலுவலர் அனிதா செய்திருந்தனர்.