வீட்டில் இருந்த பெயிண்டர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்த கேசவன்(24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கேசவன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் கேசவனின் உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கேசவன் தற்கொலை செய்து கொண்டதற்க்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.