தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை இறுதி செய்ய டிசம்பர் 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதற்குள் மாணவர்களின் விவரங்களில் தவறு எதுவும் நிகழாமல் EMISஇணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை அனைத்து பள்ளிகளுக்கும் முத்தரவிட்டுள்ளது.