பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளது. இங்கு செல்லும் சாலை தொடர் மழையால் பெயர்ந்து விட்டது. இதனால் சோதனைச்சாவடி அருகே தடுப்புகள் அமைத்து தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் வழியானது அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் அந்த சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து கேத்தி பள்ளத்தாக்கு, அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை நவீன தொலைநோக்கிகள் மூலம் கண்டு ரசிக்கலாம். எனவே அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.