தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஓய்வூதியத்தாளர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை வழங்க வேண்டிய உள்ளதால் இதுவரை வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களின் வாழ்நாள் சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.அல்லது இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மற்றும் இ சேவை மையம் மூலமாகவும் இதனை சமர்ப்பிக்க முடியும்.