Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்…. கடைசி தேதி நீட்டிப்பு….!!!!

வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது.

பென்ஷன் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஓய்வு ஊதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று. வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் தொடர்ந்து பென்ஷன் பெற முடியாது. ஏற்கனவே வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது. இது  நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ம் தேதி ஆகும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்  “பல்வேறு மாநிலங்களில் நீடிக்கும் கொரோனா சூழலையும், முதியோரின் நிலையையும் கருத்தில் கொண்டு, அனைத்து வயது பென்சனர்களுக்கும் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |