மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அண்மையில் அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளான ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை நிவாரணத்தை 15 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி பங்களிப்பு பென்ஷன் திட்டத்தின் பயனாளிகளுக்கு அகல விலை நிவாரணம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் தொகை அடிப்படை கருணை தொகையில் 381% விழுக்காட்டில் இருந்து 396 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.1960 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற ஏ, பி, சி, டி பிரிவு பயனாளிகளுக்கு முறையே 3000 ரூபாய், ஆயிரம்,750 மற்றும் 650 கருணைத்தொகை வழங்கப்படுகின்றது.இந்த நிலையில் இதுவரை ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத் தொகையில் 381 சதவீதம் அகல விலை நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனிடையே அகல விலை நிவாரணம் 396 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் தொகை உயரக்கூடும்.அதே சமயம் ஜூலை முதல் ஆன மாதங்களுக்கு அகல விலை நிவாரணம் நிலுவைத் தொகையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஓய்வூதியதாரர்களின் கணவன் மற்றும் மனைவி அல்லது தகுதியான பிள்ளைகளுக்கும் இந்த அகல விலை நிவாரணம் உயர்வு பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.