Categories
தேசிய செய்திகள்

பென்சன் திட்டத்தில் சர்ப்ரைஸ்…. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தேசிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் அல்லாத மற்ற தனியார் ஊழியர்களுக்கு எக்விட்டி (பங்குகள்) பங்கு 3 வருடங்களுக்கு முன்பு 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே எக்விட்டியில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில் விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டத்தில் எக்விட்டி வரம்பை 75 விழுக்காடாக உயர்த்துவது தொடர்ப்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சுப்ரதிம் பந்த்யோபத்யாய், “இந்திய அரசுடன் ஆலோசனை நடத்துவோம். தனியார் துறைக்கு 75 சதவீதம் அனுமதி வழங்குவது போலவே அரசு ஊழியர்களுக்கும் வழங்கும்படி கேட்போம்.
இதையடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பி எக்விட்டியில் 75 விழுக்காடு முதலீடு செய்ய விரும்பினால், அரசு ஊழியராக இருந்தாலும் தனியார் ஊழியராக இருந்தாலும் அனுமதிக்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |