செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொலில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய தலைமைச் செயலக கட்டிடம் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய கட்டிடம்.அதிலே ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டுவிட்டு, ஏதோ உலக பெரிய மருத்துமனையை தாங்கள் தான் அங்கே உருவாக்கியது போல ஸ்டிக்கர் ஒட்டி கொண்டது அதிமுக ஆட்சி. இன்றைக்கு மருத்துவமனைகளை பற்றி முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது திமுக ஆட்சியில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அன்றைக்கு துணை முதல்வராக இருந்து,
தமிழ்நாட்டிலேயே 10 அரசு கலைக் கல்லூரிகள் நம்முடைய அரசின் சார்பாக, பல்கலைக்கழகங்களின் சார்பாக உறுப்பு கல்லூரியாக அறிவித்தார்கள். அந்த பத்து அரசு கலைக் கல்லூரியையும் 2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கம் செய்து எல்லா பணியையும் முடித்து வைத்தார்கள்.
ஆனால் அவர்கள் 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பத்து கல்லூரிகளும் எதோ அதிமுகவினால் உருவாக்கப்பட்டது போல அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்ந்து அதை அதிமுக கொண்டு வந்ததாக ஒரு நாடகத்தை ஆடி அதன் மீது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டினார்களே, அப்போது …. இப்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர், அன்றைக்கு அமைச்சராக அங்கே அமர்ந்து கொண்டு தானே பார்த்துக்கொண்டு இருந்தார் என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.
எனவே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது நீங்கள் பெற்ற பிள்ளைகளை, நீங்கள் பேணி பாதுகாத்து இருக்க வேண்டும். நீங்கள் பெத்த பிள்ளைக்கு பெயர் வைத்தீர்கள் ஒளிய, சோறு வச்சியிங்களா ? என்றுதான் நாங்கள் கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.