Categories
தேசிய செய்திகள்

பெண் யூடியூபரை டார்ச்சர் செய்த இளைஞர்கள்…. வெளியான வைரல் வீடியோ…. போலீஸ் அதிரடி…..!!!!!

தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை.

அவர்கள் அவளை பின் தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினர். அவள் என் வீடு பக்கத்தில்தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை. இச்சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொபின் சந்த் முகமது ஷேக்(19) மற்றும் முகமது நகிப் சதாரைலம் அன்சாரி(20) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Categories

Tech |