Categories
உலக செய்திகள்

பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை….. பெட்டியைத் திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி….!!

ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண்களின் பெட்டியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண் பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்களின் பெட்டியை திறந்து பார்த்த போது மனித எலும்பு துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவும், அவரின் நினைவாக இந்த எலும்புத் துண்டுகளை எடுத்துச் செல்வதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். ஆர்மீனியா நாட்டை சேர்ந்த இவர்கள் வீட்டிற்கு திரும்பும்போது அவரது எலும்புகளை ஒரு பெட்டியில் சேகரித்து சூட்கேசில் பாதுகாத்துள்ளனர். கிரேக்கத்திலிருந்து ஆர்மீனியா செல்கின்ற வழியில் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இது கண்டறியப்பட்டது.

மேலும் தடுத்து நிறுத்தப்பட்ட இரு பெண்களில் ஒருவர் 77 வயது உடையவர் என்பதும் அவரின் மகள் 52 வயது உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆலோசனையில் அவர்கள் இருவரும் குற்றம் செய்யப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயத்தில் அவர்களின் உறவினர் மரணம் தொடர்பான ஆதாரங்களை இரு பெண்களும் ஒப்படைத்த நிலையில், அவர்கள் இருவரும் ஆர்மீனியாவிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் இறந்த நபரின் எலும்புத் துண்டுகளை 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு என்ன காரணம் என்று தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |