Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண் சக்தியை நிரூபித்த கமலா ஹாரிஸ்…. தமிழக துணை முதல்வர் பாராட்டு….!!

அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 284 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பல்வேறு நாட்டு அமைச்சர்கள் தலைவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில்தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், “அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், பெண் சக்தியை நிரூபித்துள்ளார். உலகை வெல்லும் மனநிலையுடன் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் வலிமையை அவர் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |