டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள தர்கா திடலில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பினர் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லி பெண் காவல்துறை அதிகாரி சபியா சைபி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுமையா நஸ்ரின்,அபிபா யாஸ்மின், எஸ்.டி.பி.ஐ, அல் சுமையா, மேற்கு மாவட்ட தலைவர் பீர் மைதீன் உள்பட ஏரளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.