பெண் ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றன வீடியோ பதிவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை ஆய்வு செய்யும் போது, அது கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது .அந்த வீடியோவில் கடத்தப்பட்ட பெண் திருமணத்திற்கு மறுப்பு கூறியதால் கடத்தப்பட்டார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பதிவு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த வீடியோ பதிவு பாஜக ஆளும் மாநிலங்களில் இது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என கூறி பகிரப்படுகிறது.அந்த வீடியோ கடந்த ஆகஸ்டு மாதம் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.