Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் ஊழியர் எரித்துக் கொன்ற வழக்கில்… “தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல்”….!!!!

பெண் ஊழியரை தீ வைத்து கொன்ற வழக்கில் சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் ஒரு கிராமத்தில் வசித்த 37 வயதுடைய பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையை கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் வசித்த தொழிலதிபர் நவநீதன் என்பவர் நடத்தி வருகின்றார். அப்போது அந்தப் பெண்ணிற்கும், நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நவநீதன் ஆசைவார்த்தை பேசி அந்தப் பெண்ணைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதை அறிந்த நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும் படி கூறினார். இதே மாதிரி அந்தப் பெண் ஆறுமுறை கர்ப்பத்தை கலைத்து உள்ளார். இது நவநீதன் மனைவி அகிலாவுக்கும் தெரியும். இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரத்தில் இருக்கின்ற நவநீதன் வீட்டிற்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் கோபமடைந்த நவநீதன், அகிலா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டார்கள். இந்த அலறல் சத்தத்தை கேட்டு உடனே அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் நவநீதன், அகிலா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நவநீதன் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருக்கின்ற நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்து கோவை ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நவநீதனை கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பின் அவரை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நவநீதன் ஐந்து தினங்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் காவல்துறையினர் அந்த பெண் வேலை செய்து வந்த சிமெண்ட் கடைக்கு சென்று அங்கு வேலை பார்த்துவரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கின்றனர் நவநீதனின் மனைவி அகிலாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |