Categories
மாநில செய்திகள்

பெண் அமைச்சர் பற்றி சர்ச்சைக்‍குரிய பேச்சு – கமல்நாத்

மத்திய பிரதேச பாஜக பெண் அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பாஜக மற்றும் அண்மையில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் டபராப் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு. கமல்நாத் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் மாநில அமைச்சருமான திருமதி. இமர்தி தேவியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக திரு. கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் 48 மணி நேரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் தேர்தல் ஆணையம் தானாக நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |