நாய் கடித்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சக்தி நகரில் பூ வியாபாரியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாளை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மாரியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.