சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை நக்கீரன் தெருவில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறார். நேற்று மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்காக புனிதா தனது வீட்டு வாசலில் அமர்ந்து பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது மர்ம ஒருவர் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று புனிதா மீது பெட்ரோலை ஊற்றினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த புனிதா சத்தம் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர் “சத்தம் போட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன்” என மிரட்டி புனிதா கையில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து புனிதா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.