புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சாருமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் காரையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாருமதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது செம்பூதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாருமதியின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால் சாருமதி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் காயமடைந்த சாருமதியை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.