Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள்….. 3 ஆண்டுகள் சிறை….. கோர்ட் அதிரடி….!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ராதாவிடம் நகையை பறித்த கொங்கணாபுரம் மொரம்புக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்(19) மற்றும் அவரது நண்பர்களான நீலகிரி மாவட்டம் கூடலுர் பகுதியை சேர்ந்த கோபி அது இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த நகையை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு எடப்பாடியில் உள்ள குற்றவியல் நடுவர் கோட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் மற்றும் கோபி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Categories

Tech |