நம் கடைகளில் வாங்கும் பட்டுப் புடவை பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் போதும் அது என்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
நாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் நாம் வாங்கும் பட்டுசேலை உண்மையானதுதானா? என்பதை கண்டுபிடிக்க சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால் அது நின்று எறிந்தால் உண்மையான பட்டு சேலை. அதே நூலில் தீ வைத்தது முடி எரிவதை போன்று சுருங்கிக் கொண்டே சென்றால் அது கலவையான பட்டு சேலை என்று அர்த்தம்.
பலரும் பட்டு சேலை என்றால் மிக அதிக எடையை கொண்டிருக்கும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர். இப்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பட்டு சேலை குறைந்த எடையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் அசல் பட்டு சேலையில் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர். நாம் நமது பட்டுச் சேலையை அணிந்து விட்டு அதை அப்படியே மடித்து வைத்து விடுகின்றனர். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஒரு சிலர் டிரைவாஷ் என்ற பெயரில் சலவைக்கு கொடுக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால் விரைவில் கலர் மங்கிவிடும்.
இதற்கு நீங்கள் பட்டு சேலை ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி அதில் பாலை கலந்து பட்டு புடவையை முக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பட்டுசேலை பளபளப்பாக இருக்கும். மேலும் வெளுத்துப் போகாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒரு மணிநேரத்திற்கு வெயிலில் போட்டு பட்டு சேலையை மடித்து வைத்தால் 100 ஆண்டுகளுக்கு கூட அப்படியே இருக்கும். குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். முக்கியமாக மற்ற புடவைகளைப் போன்று நாம் பட்டு சேலையை துவைக்க கூடாது.