கர்நாடக மாநிலத்தில் பெண்கள் விடுதியின் கழிவறைக்கு அருகில் 24 வயதான இளைஞன் ஒருவன் நிர்வாணமாக நிற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் ரைஸுர் லின்சுகூர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே பெண்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்று உள்ளது. அந்த இளைஞன் பெண்கள் உபயோகிக்கும் கழிவறைக்கு அருகில் பல நேரங்களில் நிர்வாணமாய் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளான். பெண்கள் தனியாக கழிவறைக்கு செல்லவே பயந்து வந்துள்ளனர்.
இதை எடுத்து பெண்ணொருவர் கழிவறைக்கு திங்கட்கிழமை சென்றுகொண்டிருந்தபோது ஜன்னலோரம் உடை இன்றி நின்று உள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தாயார், இது குறித்து விசாரித்துள்ளா.ர் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் அந்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.