தமிழகத்தில் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தவிர அரளி 400 ரூபாய், முல்லை 2500, கனகாம்பரம் 2000, பிச்சி பூ 1500 ரூபாய், சம்பங்கி 200 ரூபாய், செவ்வந்தி 100 ரூபாய் என பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பல வியாபாரிகள் பூக்களை வாங்காமல் திரும்பி செல்கின்றனர். திடீரென பூக்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால் பெண்கள் மல்லிகை பூவை தலையில் வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.