பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீனா குப்தா (69). இவருடைய மகள் மசாபா குப்தா மாடலிங்கில் கலக்கி வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை 4 வருடத்திற்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இவர் தற்போது நடிகர் சந்தீப் மிஸ்ராவுடன் பழகி வரும் நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நீனா குப்தா நேற்று ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பெண்களுக்கு நிதி சுதந்திரம் இருப்பதால் தான் அதிக அளவில் விவாகரத்து நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.
அதன்பிறகு இளம் பெண்கள் சம்பாதிப்பதால் ஆண்களிடம் இருந்து அவர்கள் எதையுமே எதிர்பார்ப்பது கிடையாது. இதனால்தான் விவாகரத்துகள் நடைபெறுகிறது. ஆனால் முந்தைய காலங்களில் கஷ்டப்படுவதை தவிர பெண்களுக்கு வேறு வழியே கிடையாது. இருப்பினும் திருமணம் என்பது என்னை பொருத்தவரை ஒரு நல்ல அமைப்பு. ஆகவே அதை நான் நம்புகிறேன். மேலும் நான் திருமணத்தை நம்புவதால் விவாகரத்து சம்பவங்கள் எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.