Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் கட்டாயம் உண்ணவேண்டிய 5 பழங்கள்…!!!

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் 5 பழ வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாத பொருள். அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் சத்துக்கள் நிறைய கிடைக்கும். தினமும் மதிய உணவிற்கு முன் ஏதேனும் ஒரு பழவகையை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் பெண்கள் அன்றாடம் தங்களது உணவோடு எடுத்துக்கொள்ளவேண்டிய பழங்களைக் குறித்துப் பார்க்கலாம்.

சப்போட்டா

இது குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கும். சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் நீங்கும், மூட்டுவலி மறையும், உடல்பருமனைக் குறைக்கும். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சுரப்புக்கும், சுத்திகரிப்புக்கும் பங்களிக்கும்.

வெள்ளரிப்பழம்

இது வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கும். இந்த பழம் கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு, சீரற்ற மாதவிடாயை சரிசெய்து தொப்பையைக் குறைக்கும். மலச்சிக்கல் நீக்கும். பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும்.

திராட்சை

திராட்சை பழத்தை தினமும் உட்கொள்வது மூலம் கண்கள் தொடர்பான பிரச்னைகள் தீரும். இது கண்களின் பாதுகாவலன். அதோடு பெண்களின் ரத்தச்சோகையை சீர் செய்வதோடு மலச்சிக்கலைத் தீர்க்கும்.

தர்பூசணி

அதிக நீர்ச்சத்து கொண்ட பழம். இது முகப்பருவை நீக்கி முகப் பொலிவு தரும். உடலைக் கட்டுக் கோப்பாக வைக்க உதவும். இதிலுள்ள வெள்ளைப் பகுதியை நீரிழிவு மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை

இது ரத்த சோகயை சரி செய்வதுடன், கர்ப்பப்பை கட்டிகளையும் கரைக்கவல்லது. பெண்களின் குடல், வயிறு, கர்ப்பப்பை புண் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். மலட்டுத் தன்மையைப் போக்கும்.

Categories

Tech |