Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெண்கள் ஐ.பி.எல். போட்டி…. “அடுத்த ஆண்டு நடத்த திட்டம்”…. கங்குலி சொன்ன தகவல்….!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியானது அடுத்த ஆண்டு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை முன்னாள் கேப்டனான கங்குலி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான ஐ.பி.எல் காட்சி போட்டியானது 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது.  ஆனால் கடந்த ஆண்டு இந்த காட்சி போட்டி நடைபெறாததால் இந்த ஆண்டு ஐ.பி.எல். காட்சி போட்டியினை நடத்தவுள்ளது.
ஐ.பி.எல். பிளே ஆப் போட்டி நடைபெறும் தினத்தன்று 4 காட்சி போட்டிகளும்  நடக்க இருக்கின்றனர். மேலும் இந்த போட்டியை புனேயில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பெண்கள்  ஐ.பி.எல்  போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் எனவும் இந்த போட்டியில் 5 முதல் 6 அணிகள் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.

Categories

Tech |