Categories
தேசிய செய்திகள்

பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை…அதிகாரிகள் விசாரணை..தக்க நடவடிக்கை எடுக்கபடுமா..?

குஜராத்தில் பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை, தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி பணிகளுக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து உடல் பரிசோதனை  செய்தது பெரும் சர்ச்சையாக உள்ளது.

துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அழைக்கப்பட்ட 100 பெண்களை உடல் பரிசோதனைக்காக நிற்க வைத்து இருந்தனர். அப்போது அவர்களின்  உடைகளை களைந்து நிர்வாணமாக  பல மணி நேரம் நிற்க வைத்தது சர்ச்சையாகி உள்ளது.

10 பெண்கள் என குழுவாக நிற்கவைத்து தாய்மை உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்த குஜராத் அரசு முதன்மை செயலாளர் கமல் தயானி நேர்முகத்தேர்வு நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அடிப்படை மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இது பற்றி தகவல்கள் கிடைத்த தேசிய மகளிர் ஆணையமும், குஜராத் அரசின் தலைமை செயலாளர் அணில் முகினுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

Categories

Tech |