காரைக்குடியில் பெண்களைக் கவர பைக் ஸ்டண்டில் ஈடுபட்டவர் கீழே விழுந்து காயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கல்லூரி பேருந்து நிலையத்தில் மாணவிகள் கூட்டமாக நின்றனர். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் இரு இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்றனர். ஒருவர் பைக்கை ஓட்டும்போது, பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர், மாணவிகள் முன் சாகசன் செய்து காட்ட, சீட்டில் இருந்து எழுந்து காலைத் தூக்கியபோது, தடுமாறி சாலையில் விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பானன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரிப்புடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த வீடியோ.