பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேடை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி பேட், டம்பான்கள், மாதவிடாய் காப் என அனைத்தும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் அதிக அளவு பயன்படுத்தும் சானிட்டரி பேடுகள் மட்டுமே. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. அது புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இது மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சுவதால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் உள்ள கெமிக்கல் பொருட்களால் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டாகிறது.
அதில் இருக்கும் டயாக்சின் தன்மை நம் இனப்பெருக்க உறுப்புகளுக்கு சென்று கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் உயிரணுக்களை உருவாக்க ஊக்குவிக்கிறது. இது மாதவிடாய் காலங்களின் பயன்படுத்தப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது. அதனால்தான் பிறப்புறுப்பு மேலும் தொற்றுக்கு ஆளாகிறது. அதுமட்டுமன்றி நீண்டகால சிக்கலுக்கு வழிவகுக்கும்.
எனவே உங்கள் மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு இல்லாவிட்டால்கூட ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் பேடுகளை மாற்ற வேண்டும். எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஈரமான உள்ளாடைகளை அணிவதால் நோய் தொற்று உண்டாக வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு கெமிக்கல்கள் நிறைந்த பேடுகளுக்கு பதிலாக ஆர்கானிக் பேடுகளை வாங்கி பயன்படுத்தி வாருங்கள். பிறப்புறுப்பு பகுதியில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்பகுதியில் ஏதாவது அரிப்பு மற்றும் தடுப்புகள் காணப்பட்டால் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.