பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா என்ற சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை, கருத்தடை சாதனங்கள் இல்லாமல் உறவு கொண்டால் கர்ப்பம் ஏற்படாது என்ற கணக்கீடும் முறை, பல நேரங்களில் தவறும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மாதவிடாய் வெளியான முதல் நாளில் இருந்தே கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும், சினை முட்டை வெளியாகும் முந்தைய ஏழாம் நாள் முதல் பதினோராம் நாள் வரை கருத்தரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே தம்பதியினர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் மாதவிடாய் வெளியாகும் நாட்களில் உடலுறவு கொள்வது ஆபத்து தான்.