Categories
மாநில செய்திகள்

பெண்களே!… இனி உங்கள் வீடு தேடி வரும் வேலை…. இது அல்லவா சூப்பர் அறிவிப்பு….!!!!

பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேற்றம் அடைவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த அடிப்படையில் சேலத்தில் உள்ள சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக பெண்கள் தங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிக்கொள்ள சுயதிறன் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர். சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர், அரசியவாதி ஆர். பார்த்தசாரதி என்பவர் சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் வாயிலாக பெண்களுக்கான பொருளாதார சுய மேம்பாடு வேலைத்திட்டத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் சேலம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஆர்.பி.எஸ். தொடர்ந்து தன் நிறுவனத்தின் வாயிலாக பல சமூகசேவைகளை செய்து வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஆர்.பி.எஸ்., கட்சி பாகுபடுகள் இன்றி சேலம் மக்களின் முன்னேற்றத்திற்காக பணிபுரிந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். இதில் ஆர்.பி.எஸ். அளிக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அப்பகுதி பெண்கள், துணிபைகளை வீட்டிலிருந்து தைப்பதற்கு இயந்திரங்களை கொடுத்து, அதன் வாயிலாக மாதந்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறோம். அத்துடன் தங்களின் குடும்பவேலை போக மீதியுள்ள நேரங்களில் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

அந்த நிறுவனமே வீடுதேடி பணிகளை வழங்குகிறது. இதனால் தங்களின் குடும்பம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதாகவும், தங்களது குழந்தைகளின் கல்வி செலவை இதன் வாயிலாக பூர்த்தி செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். இச்சேவை தொடர்பாக ஆர்.பி.எஸ்.கூறியதாவது, பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை தன் நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்துவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஆண்களுக்கு நிகராக பெண்களும் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு பெண்களின் சுயதொழில் வாயிலாக 1200 துணிபைகளை உற்பத்தி செய்ய வைத்து இந்தியாவை தன்னிறைவு கொண்டதாகவும், பெண்களை பொருளாதார முகவர்களாக மாற்றுவதிலும் ஆர்.பி.எஸ்-ன் முயற்சி பெரும்பங்கு வகிக்கிறது என அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |