Categories
தேசிய செய்திகள்

பெண்களே! ஆபத்தில் இருக்கிறீர்களா….? உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்…!!!

இந்தியாவில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. அரசு இதற்கான தண்டனையை குற்றவாளிக்கு கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் பெண் குழந்தைகள் வெளியே சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படுவதால் அச்சத்துடனேயே தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியே அனுப்புகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவ்வாறு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உதவி எண்களை அளித்து வருகிறது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் 24 மணிநேர உதவிக்கான எண்ணை (7827170170) மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி துவக்கி வைத்தார் .வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் காவல்துறை, மருத்துவமனைகள் மாவட்ட சட்ட சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் போன்றவற்றில் தகுந்த அதிகாரிகளுடன் இணைப்பதே இந்த எண்ணின் நோக்கம் ஆகும். தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த புதிய முயற்சிக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |