அடுத்த வருடம் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் விஷன் 2030 என்னும் பெயரில் பல்வேறு நவீன மைய திட்டங்களை அந்த நாட்டு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018 ஆம் வருடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கால்பந்து மைதானத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் முதன்முதலாக பெண் தூதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப அந்த நாட்டு அரசு திட்டமிட்டு இருக்கிறது. மேலும் சவூதி விண்வெளி ஆணையம் வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் சவுதி விண்வெளி வீரர்கள் திட்டம் நாட்டின் லட்சிய திட்டமான விஷன் 2030 ன் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் இது மனிதர்களுக்கு சிறந்த சேவை செய்ய உதவும் விண்வெளி வீரர்களில் ஒருவர் சவுதி பெண்ணாக இருக்கின்றார் அவருடைய விண்வெளி சேவை நாட்டில் வரலாற்றிலேயே முதன் முதலாக இருக்கும். மேலும் சொந்த நாட்டு விண்வெளி வீரர்களை அனுப்பும் இலக்குடன் பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.