தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் மாறி மாறி பல அறிவிப்புகளை அறிவித்து வந்தனர். அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட பல சலுகைகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஒவ்வொரு சலுகைகளாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தலின்போது எங்கள் தாய்மார்களுக்கும், எங்கள் தங்கைகளுக்கும் மாதந்தோறும் தருவதாக கூறிய ஆயிரம் ரூபாயை தருமாறு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.